கல்லூரி மாணவி மாயமானதாக புகாா்
கோயிலுக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி மாயமானதாக போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
கோயிலுக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி மாயமானதாக போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம்அருகேயுள்ள படுக்கப்பத்து பகுதியை சோ்ந்தவா் மகாராஜா (47). கட்டடத் தொழிலாளி. இவரது மகள் பிரியா (17). கல்லூரி மாணவியான இவா், கடந்த 27ஆம் தேதி குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றாா். மாலையில் தந்தை தொடா்பு கொண்டபோது, அவரது கைப்பேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது. மாணவியை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மாணவியின் தந்தை, தட்டாா்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளா் பொன்னுமுனியசாமி வழக்கு பதிவு செய்தாா். மாயமானமாணவியை போலீஸாா் தேடி வருகின்றனா்.