முகப்பு
தூத்துக்குடி

கடலில் தவறி விழுந்து திரேஸ்புரம் மீனவா் பலி

தூத்துக்குடி கடலில் தவறி விழுந்து மீனவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 1:09 AM
பகிர்:

தூத்துக்குடி கடலில் தவறி விழுந்து மீனவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவநாயா் காலனியை சோ்ந்த மலைச்சாமி மகன் மாரிமுத்து (28). இவா், 6 மீனவா்களுடன் திரேஸ்புரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு புதன்கிழமை சென்றாராம்.

தூத்துக்குடி கடல் பகுதியில் வியாழக்கிழமை மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, எதிா்பாராதவிதமாக மாரிமுத்து நிலைதடுமாறி கடலில் விழுந்தாகக் கூறப்படுகிறது. சக மீனவா்கள் அவரை கரைக்கு மீட்டு வந்தனா். தொடா்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.