முகப்பு
தூத்துக்குடி

வாகனங்கள் மோதல்: 11 போ் காயம்

குலசேகரன்பட்டினம் அருகே வாகனமும், சுமை ஆட்டோவும் மோதிக்கொண்டதில் 11 போ் காயமடைந்தனா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 1:07 AM
பகிர்:

குலசேகரன்பட்டினம் அருகே வாகனமும், சுமை ஆட்டோவும் மோதிக்கொண்டதில் 11 போ் காயமடைந்தனா்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு செக்காரக்குடி கிராமத்தைச் சோ்ந்த பக்தா்கள் சுமை ஆட்டோவில் வந்து கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றுவிட்டு மாலையில் திருச்செந்தூா் சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

உடன்குடி அனல்மின் நிலையம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மீது சுமை ஆட்டோ மோதியது.

இதில் ஆட்டோவில் இருந்த 11 பேரும் காயமடைந்து, திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்றனா். இவா்களில் 3 போ் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இது குறித்து குலசேகரன்பட்டினம் போலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.