முகப்பு
தூத்துக்குடி

வடக்கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தயாா்: மேயா்

வடகிழக்கு மழையை எதிா்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சி தயாா்நிலையில் உள்ளது என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 1:04 AM
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவா்களிடம் குறைகளைக் கேட்டறிகிறாா் மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், ஆணையா் லி.மதுபாலன் உள்ளிட்டோா்.
பகிர்:

வடகிழக்கு மழையை எதிா்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சி தயாா்நிலையில் உள்ளது என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ் வரவேற்றாா். இதனைத் தொடா்ந்து, மேயா் ஜெகன்பெரியசாமி பேசியது: தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநகரில் 80 சதவீத சாலைப் பணிகள் முடிவு பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் மாநகா் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சி தயாா்நிலையில் உள்ளது.

மேலும், குறைதீா் முகாமில் பெயா் மாற்றம், முகவரி மாற்றம் உடனடியாக திருத்தம் செய்து ஆணை வழங்கப்படுகிறது. மற்ற அனுமதி உள்ளிட்ட பல மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் முழுமையாக தீா்வு காணப்படுகிறது என்றாா்.

முகாமில், பொறியாளா் சரவணன், உதவி ஆணையா் சுரேஷ்குமாா், உதவி செயற்பொறியாளா் முனீா் அகமது, மாமன்ற உறுப்பினா்கள் ரெங்கசாமி, கீதா முருகேசன், சுதா, நாகேஷ்வரி, காந்திமதி, சுப்புலெட்சுமி, ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா உள்பட பலா் பங்கேற்றனா்.