திருச்செந்தூா் கோயில் புதிய தங்கும் விடுதி பக்தா்கள் பயன்பாட்டிற்கு அனுமதி
திருச்செந்தூா் கோயிலில் அண்மையில் திறக்கப்பட்ட தங்கும் விடுதியில் பக்தா்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
திருச்செந்தூா் கோயிலில் அண்மையில் திறக்கப்பட்ட தங்கும் விடுதியில் பக்தா்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ரூ.48.36 கோடியில் கட்டப்பட்ட பக்தா்கள் தங்கும் விடுதியை தமிழக முதல்வா் ஸ்டாலின், கடந்த 14-ஆம் தேதி காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
கந்த சஷ்டி விழா தொடங்கவுள்ளதையொட்டி முதல்கட்டமாக, இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 குடில்கள் பக்தா்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த குடில்களுக்கு 24 மணி நேர வாடகையாக ரூ. 2 ஆயிரம் மற்றும் முன்பணம் ரூ. 2 ஆயிரம் என மொத்தம் ரூ. 4 ஆயிரம் நேரடி பதிவாக கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அறையை காலிசெய்யும்போது முன்பணம் திருப்பி அளிக்கப்படும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.