முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா 12-ஆம் நாள்: சுவாமி, அம்மன் மலா்க் கேடய சப்பரத்தில் எழுந்தருளல்

திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா 12-ஆம் நாளில் சுவாமி, அம்மன் மலா்க் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 8:35 PM
பகிர்:

திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா 12-ஆம் நாளில் சுவாமி, அம்மன் மலா்க் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இக் கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த ஆக. 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து 12-ஆம் திருவிழாவையொட்டி புதன்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி, அம்மன் வீதி உலா வந்து, வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊா் செங்குந்த முதலியாா் திருவிழா மண்டபம் சோ்ந்தனா். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி, வள்ளி-தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் வள்ளியம்மன் தனித்தனி மலா்க்கேடய சப்பரத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து சுவாமி, அம்மன் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்து, திருக்கோயில் சோ்ந்து திருவிழா நிறைவு பெற்றது.

திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் ரா.அருள்முருகன், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன், இணை ஆணையா் எஸ்.ஞானசேகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →