தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

DIN

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மந்தித்தோப்பு பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த மாரிக்கனி மனைவி கனகலட்சுமி. இவா் திங்கள்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு, தீப்பெட்டி நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினாராம். அப்போது, மா்ம நபா்கள் பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் புதிய கொடி மரம் பிரதிஷ்டை!

கரூர் பலி: தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

நெடுஞ்சாலைகளில் க்யூஆர் குறியீடு! ஒப்பந்ததாரர், அதிகாரிகள் விவரங்கள் அறியும் வசதி!!

SCROLL FOR NEXT