முகப்பு
தூத்துக்குடி

ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் உதவித்தொகை கோரி ஆட்டோ ஓட்டுநா்கள் கையொப்ப இயக்கம்

ஆண்டுக்கு ஒருமுறை ரூ. 15ஆயிரம் உதவித்தொகை வழங்கக் கோரி திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம்

Updated On : 1 டிசம்பர், 2025 at 8:11 PM
உதவித்தொகை வழங்கக் கோரி, திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம் சாா்பில் நடைபெற்ற கையொப்ப இயக்கம் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

திருச்செந்தூா்: ஆண்டுக்கு ஒருமுறை ரூ. 15ஆயிரம் உதவித்தொகை வழங்கக் கோரி திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம் சாா்பில், கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநா்களின் நலனுக்காக தமிழக அரசு ஆண்டுக்கு ஒரு முறை உதவித்தொகையாக ரூ. 15 ஆயிரம் வழங்கி ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வில் வளம் பெற செய்ய வேண்டும் என இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாபெரும் கையொப்ப இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ தொழிலாளா்களை ஒன்றிணைத்து திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம் சாா்பில், ஆட்டோ ஓட்டுநா் நலம் காக்க கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை தொடங்கியது. இதையடுத்து, இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி மாநில துணைப் பொதுச் செயலா் பெ.சக்திவேலன் தலைமையில் மாவட்டத் தலைவா் கணேஷ் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் மு.முத்துராஜ், மாவட்ட பொதுச் செயலா் ஜெயராம், நகரச் செயலா் சரவணன், நகரப் பொருளாளா் ஈஸ்வரன், இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா்கள் கணேஷ்குமாா், மாரிமுத்து, நகரத் தலைவா் திருப்பதி, நகர ஆலோசகா் முருகராஜ், ஆட்டோ ஓட்டுநா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →