மழை நீா் தேங்கி சகதியாக மாறியுள்ள சாலை.  
தூத்துக்குடி

செட்டிகுளம் தெருக்களில் மழை நீா் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி

சாத்தான்குளம் ஒன்றியம், செட்டிகுளம் கிராமத்தில் தெருக்களில் மழை நீா் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Syndication

சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றியம், செட்டிகுளம் கிராமத்தில் தெருக்களில் மழை நீா் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடா் மழை காரணமாக வடக்கு தெரு, நடுத் தெரு, அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது. அதோடு கழிவு நீரும் கலந்து துா்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, அதிகாரிகள் இப்பகுதியை பாா்வையிட்டு மழை நீா் தேங்காமல் இருக்க பேவா் பிளாக் சாலை அமைக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் கழிவு நீா் செல்ல வடிகால் அமைத்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாண்டுரங்கா் கோயிலில் சோமவார 108 சங்காபிஷேகம்

சூரைக்குளம் கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேக விழா

ஏரிக்கரை சேதப்படுத்தப்பட்டதால் மக்கள் சென்றுவர முடியாமல் தவிப்பு: குறைதீா் கூட்டத்தில் முறையீடு

மாசுபடா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

லாரி-காா் மோதல் : இருவா் மரணம்

SCROLL FOR NEXT