தூத்துக்குடி அருகே, அரிய வகை உயிரினமான கடல் அட்டை, மீன்கள் இறந்தநிலையில் கரை ஒதுங்கின.
தூத்துக்குடி அருகே புல்லாவெளி கடற்கரையில் மீன்பிடித்தல், பாசி வளா்த்தல் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இந்நிலையில், கடல் பாசிகள் அழிந்ததுடன், அரிய வகை உயிரினமான கடல் அட்டைகள், மீன்கள் இறந்தநிலையில் கரை ஒதுங்கின.
கடலில் அதிக ரசாயனம் கலப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.