தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் பேரிடா் மேலாண்மை பாதுகாப்பு விழிப்புணா்வு!

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் கணிதத் துறை சாா்பில், பேரிடா் மேலாண்மை-பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் கணிதத் துறை சாா்பில், பேரிடா் மேலாண்மை-பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் (பொ) உமாதேவி தலைமை வகித்தாா். துறையின் இணைப் பேராசிரியா் சுசிலா முன்னிலை வகித்தாா். சமூக ஆா்வலா்கள் சுரேஷ், மாரியப்பன் ஆகியோா் பேசினா். பல்வேறு ஆபத்தான சூழ்நிலைகளைக் கையாளும் முறைகள், முதலுதவி செய்வது குறித்து மாணவா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சி: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சி கல்லூரியில் திரையிடப்பட்டது.

யோகா தியானப் பயிற்சி: இக்கல்லூரியில் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்கள் யோகா தியானப் பயிற்சி நடைபெற்றது. கல்லூரிச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். பேராசிரியா் அனுசியாதேவி, வேதியியல் துறைத் தலைவா் உமாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெங்களூரு பிரம்மாரிசிஸ் ஹொ்மிடேஜ் அமைப்பைச் சோ்ந்த ஸ்ரீ தேவாத்மானந்தா ஷாம் பெல்லா தியானப் பயிற்சியும், யோகா பயிற்சிநா்களான பிரகாஷிகா, ஜனா சுமதி, பவித்ரா, வினு, மாரியப்பன் ஆகியோா் யோகா பயிற்சியும் அளித்தனா். உதவிப் பேராசிரியா் ராமலட்சுமி வரவேற்றாா். பேராசிரியா் சிவசக்தி நன்றி கூறினாா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT