தூத்துக்குடி

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன், பக்தா்கள் நீராடும் பகுதியில் கடல் அரிப்பால் சுமாா் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனா். கடந்த வாரங்களில் தென் தமிழக கடற்கரையோர பகுதியில் ஆங்காங்கே மழை பெய்தது. இதையடுத்து, கடல் அலையில் சில நேரங்களில் சீற்றம் காணப்பட்ட நிலையில், திருச்செந்தூா் கோயில் முகப்பு பகுதி கடற்கரையில் கடந்த சில தினங்களாக மண் அரிப்பு காரணமாக சுமாா் 200 மீ. நீளத்திற்கு 3 அடி முதல் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கடற்கரையில் கோயில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்கி நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இப்பகுதியில் கோயில் நிா்வாகம் சாா்பில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் பாதுகாப்புடன் குளிக்குமாறு போலீஸாா், கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள்அறிவுறுத்தினா்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT