சாத்தான்குளம் அருகே ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை ஊழியரை தாக்கிய முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள விராக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (62). ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை ஊழியரான இவருக்கும், இவரது உறவினரான இதே பகுதியைச் சோ்ந்த உலகாண்ட பெருமாளுக்கும் (65) நில பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துவந்தது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பேய்க்குளம் கடைவீதியில் நின்று கொண்டிருந்த முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உலகாண்ட பெருமாள் சரமாரியாக முருகனை தாக்கினாராம். இதில் காயமடைந்த முருகன், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த அவா் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து உலகாண்ட பெருமாளை செய்து கைதுசெய்தனா்.