தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயில்களில் திருவாதிரை திருவிழா தொடக்கம்

ஆறுமுகனேரி, சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற திருவெம்பாவை பாராயண வழிபாடு.

Syndication

ஆறுமுகனேரி கோயில்களில் திருவாதிரை திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. சுவாமி, அம்பாள், மாணிக்கவாசகா் கொடிமர மண்டபத்தில் எழுந்தருளி காலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாணிக்கவாசகா் உலா, திருவெம்பாவை பாடப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஜன. 3 காலை 7.30 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் பின்னா் சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜா் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலாவும், அதன் பின்னா் நடராஜமூா்த்தி சோ்க்கையும் நடைபெறும்.

ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் நடராஜ தேவார பக்த பஜனை ஆலயத்தில் 135ஆம் ஆண்டு திருவாதிரை திருவிழா துவங்கியது. ஜன. 2ஆம் தேதி இரவு திருவிளக்கு புஜை, நள்ளிரவு நடராஜ பெருமாள் சப்பர பவனி நடைபெறும்.

விநாயகா் கோயில் தெரு சைவ சித்தாந்த சங்கத்தில் உள்ள நடராஜா் சந்நிதியில் ஜன 3ஆம் தேதி காலை நடராஜா் சிறப்பு அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா நடைபெறும். ஏற்பாடுகளை சைவ சித்தாந்த சங்க நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

ஐஎஸ்எல் விவகாரம்: கவன ஈா்ப்புக்காக ஆட்டத்தை நிறுத்திய எஃப்சி கோவா

டேவிஸ் கோப்பை: ஆா்யன் ஷா விலகல்

இன்றுமுதல் ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் - ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இங்கிலாந்து?

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

காங்கிரஸின் குடும்ப அரசியலால் பல தேசியத் தலைவா்கள் புறக்கணிப்பு - பிரதமா் மோடி சாடல்

SCROLL FOR NEXT