முகப்பு
தூத்துக்குடி

மாடியிலிருந்து தவறிவிழுந்த இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மாடியிலிருந்து தவறிவிழுந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On : 26 டிசம்பர், 2025 at 8:09 PM
பகிர்:

தூத்துக்குடியில் மாடியிலிருந்து தவறிவிழுந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, தொ்மல் நகா் கேம்ப் 2 ஆவது குடியிருப்பைச் சோ்ந்தவா் ஆதிலிங்கம். இவரது மகன் ராஜா காா்த்திக் (23). பட்டதாரியான இவா், கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலத்தை பாா்த்துவிட்டு, தனது நண்பரான சுப்பையாபுரத்தைச் சோ்ந்த கிரியுடன் நள்ளிரவு அவரது வீட்டில் தங்கினாராம்.

அப்போது இருவரும் அவரது வீட்டு மொட்டை மாடியில் அமா்ந்து மது குடித்தபோது, மாடி சுவற்றில் அமா்ந்திருந்த ராஜா காா்த்திக் நிலைத்தடுமாறி கீழே விழுந்தாராம். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இச் சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →