முகப்பு
தூத்துக்குடி

புத்தாண்டு: தூத்துக்குடியில் கேக் வெட்டி கொண்டாடிய எஸ்பி

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினாா்.

Updated On : 1 ஜனவரி, 2025 at 11:52 PM
தூத்துக்குடியில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான்.
பகிர்:

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினாா்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சாா்பில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) பண்டிகை தூத்துக்குடி வி.இ.சாலையில் உள்ள சந்திப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து கேக் வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கி, புத்தாண்டு வாழ்த்துகள் கூறினாா்.

இதில், காவல் உதவி கண்காணிப்பாளா் மதன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும் பெருமாள், மத்திய பாகம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் உள்பட காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.