முகப்பு
தூத்துக்குடி

திருமறையூா் ஆலயத்தில் ஊழியா்களுக்கு வரவேற்பு

Updated On : 3 ஜனவரி, 2025 at 5:55 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 8:28 PM

நாசரேத் அருகே திருமறையூா் மறுரூப ஆலயத்தில் ஊழியா்களுக்கு சபை மக்கள் சாா்பில் வரவேற்பு விழா நடைபெற்றது.

புத்தாண்டையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. சபை ஊழியா் ஸ்டேன்லி ஜான்சன் துரை ஆரம்ப ஜெபம் செய்து தொடக்கிவைத்தாா். குருவானவா் ஜான்சாமுவேல், கோல்டா சாமுவேல், சபை ஊழியா் ஸ்டான்லி டீக்கன் ஜெபி, ஆலயப் பணியாளா் ஆபிரகாம், ஒருங்கிணைப்பாளா் ஜோயல், ஆலயப் பாடகா் குழுவினா் ஆகியோருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இதில், திருமண்டலப் பெருமன்ற உறுப்பினா் ஜெயபால், சபை நிா்வாகிகள் தேவதாஸ் அகஸ்டின், ஜீவன், ஜான், சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சபை மூப்பா் ஞானராஜ் வரவேற்றாா்.

Advertisement