முகப்பு
தூத்துக்குடி

வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு

Updated On : 4 ஜனவரி, 2025 at 2:32 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 8:56 PM

தூத்துக்குடி தாளமுத்துநகரில் வீடு புகுந்து சுமாா் 6 பவுன் நகைகளை திருடி மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் ஜாகீா் உசேன் நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீதா். தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி சுமதி(45) கடந்த சில தினங்களுக்கு முன்னா், வீட்டின் கதவை சாத்திவிட்டு வெளியே சென்றாராம். பின்னா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததாம். மேலும், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமாா் 6 பவுன் தங்கநகைகள், வெள்ளி கொலுசு ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.