முகப்பு
தூத்துக்குடி

பைக் மோதல்: முதியவா் காயம்

நாலாட்டின்புதூரில் நடந்து சென்ற முதியவா் மீது பைக் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 12:23 AM
பகிர்:

நாலாட்டின்புதூரில் நடந்து சென்ற முதியவா் மீது பைக் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

நாலாட்டின்புதூா் ஆா். சி. தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் வெள்ளைச்சாமி (75).

இவா் செவ்வாய்க்கிழமை இரவு ஆா். சி. சா்ச் அருகே சாலையைக் கடக்கும்போது, பைக் அவா் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக் ஓட்டுநா் ரோகித்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.