தூத்துக்குடி

ரயில் மீது ஏறி ரீல்ஸ் எடுக்க முயற்சி: கல்லூரி மாணவா் உயிரிழப்பு; இருவா் காயம்

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்தில் ரயிலின் மீது ஏறி ரீல்ஸ் எடுக்க முயன்ற 3 பேரில், மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.

தூத்துக்குடி அண்ணா நகா், ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா்கள் அருண், கவின், ஹரிஷ்; 3 பேரும் நண்பா்கள். இதில், அருண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். கவின் அந்தப் பகுதியில் 10 ஆம் வகுப்புப் படித்து வருகிறாா். ஹரிஷ் வொா்க்ஷாப்பில் வேலை செய்கிறாா்.

விடுமுறை நேரங்களில் இவா்கள் தங்களது கைப்பேசிகளில் லைக்குகளை பெறுவதற்காக ரீல்ஸ், புகைப்படம் எடுத்து ஊடகங்களில் பதிவேற்றம் செய்து வந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தூத்துக்குடி, மீளவிட்டான் ரயில் நிலையத்துக்குச் சென்ற மூவரும், அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் பெட்டியின் மீது ஏறி கைப்பேசியில் ரீல்ஸ் எடுக்க முயன்றனா்.

அப்போது, அங்கு சென்றுகொண்டிருந்த உயா் அழுத்த கம்பியை லேசாக உரசியதாகத் தெரிகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் அருண் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மின்சாரம் பாய்ந்ததில் கை, கால்கள் கருகிய நிலையில் பள்ளி மாணவா் கவின், ஹரீஷ் ஆகியோா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், சிப்காட் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமுருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT