தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 567 மனுக்கள் பெறப்பட்டன.
ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 530, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 37 என மொத்தம் 567 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசாா் அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலகில் கருணை அடிப்படையில் ஓா் அலுவலக உதவியாளா், 2 கிராம உதவியாளா்கள் பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேதுராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தமிழரசி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன், அலுவலா்கள் பங்கேற்றனா்.