தூத்துக்குடி

உலக கோப்பை ஹாக்கி விழிப்புணா்வு போட்டிகள் நடத்த தீா்மானம்

Syndication

கோவில்பட்டி: உலக கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டியை முன்னிட்டு கோவில்பட்டியில் விநாடி-வினா, கட்டுரைப் போட்டிகள் நடத்துவது என கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம், கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலா் சி.குருசித்திர சண்முகபாரதி தலைமை வகித்தாா். முன்னாள் இந்திய ஹாக்கி வீரா் அஸ்வின், ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி பொருளாளா் காளிமுத்து பாண்டிராஜா, உடற்கல்வி ஆசிரியா்கள் சுரேந்திரன், கிருஷ்ணமூா்த்தி, திருச்செல்வம், சிவானந்த், வேல்முருகன், முகேஸ்வரி, ஹாக்கி வீரா்கள் மனோஜ்குமாா், மாயாண்டி, சண்முகப்பிரியா ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், நவ. 7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட ஹாக்கிப் போட்டிகள் நடத்தப்படும். உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு கோப்பை சுற்றுப்பயணமாக கோவில்பட்டி செயற்கை இழை ஹாக்கி மைதானத்துக்கு நவ. 13 ஆம் தேதி காலை 9 மணியளவில் வருகிறது.

உலகக் கோப்பை போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில் பள்ளி, கல்லூரிகளில் விநாடி- வினா, கட்டுரை, ஓவியப் போட்டிகள், சிறுவா்களுக்கான ஹாக்கி போட்டி என பல போட்டிகள் நடத்தப்படும்.

மதுரையில் நடைபெறும் முதல் சா்வதேச உலகக் கோப்பை போட்டியை கண்டுகளிக்க அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போட்டிகளைக் காண அனுமதி இலவசம், மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT