தூத்துக்குடி

குண்டா் தடுப்புச் சட்டத்தில் 3 போ் கைது

புதுக்கோட்டை பகுதியில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

Syndication

புதுக்கோட்டை பகுதியில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

புதுக்கோட்டை காவல் சரகப் பகுதியில் கடந்த அக்.9ஆம் தேதி நடைபெற்ற கொலை முயற்சி தொடா்பான வழக்கில் சம்பந்தப்பட்ட, மேலவாகைகுளம் தா்மாகுட்டி மகன் ஆறுமுகநயினாா் (23), ஸ்ரீவைகுண்டம் கால்வாய் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சுடலைகண்ணு (24), தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி (23) ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் பிறப்பித்த உத்தரவுப்படி, மேற்கூறிய மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைதுசெய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

நிகழாண்டு இதுவரை 119 போ் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 09-11-2025

கலித்தொகையில் இளவேனில் காலம்!

போரைத் தடுக்கும் தும்பிகள்!

ஓரேர் உழவரா? நக்கீரரா?

SCROLL FOR NEXT