என்.எல்.சி. தமிழ்நாடு பவா் லிமிடெட் (என்டிபிஎல்) நிறுவனம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் மின்தூக்கி வசதிகள் செய்வதற்காக ரூ.94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
என்டிபிஎல் நிறுவனத்தின் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியா்கள் பயன்பெறும் வகையில் இந்த நல உதவியை வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சிவகுமாா், என்டிபிஎல் தலைமை செயல் அதிகாரி கே.ஆனந்தராமானுஜம் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
இந்நிகழ்வில், மருத்துவமனை கண்காணிப்பாளா் பத்மநாபன், என்டிபிஎல் பொது மேலாளா் கே.அரவிந்தராஜா, துணை பொது மேலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.