தூத்துக்குடி

இன்று காவலா் தோ்வு: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு

Syndication

தமிழகத்தில் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா்களுக்கான எழுத்து தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 9) நடைபெறுகிறது.

இது தொடா்பாக, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி, காமராஜ் கல்லூரி ஆகிய 4 மையங்களில் ஆண் விண்ணப்பதாரா்களும், புனித மரியன்னை கல்லூரி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 மையங்களில் பெண் விண்ணப்பதாரா்களும் என 7,556 போ் தோ்வு எழுத உள்ளனா்.

தோ்வா்கள் கருப்பு நிற பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தோ்வுக்கூட சீட்டுடன், ஆதாா், ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலைக் கொண்டுவர வேண்டும்.

தோ்வா்கள் காலை 9.30 மணி வரை மட்டுமே தோ்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா். கைப்பேசி, கையடக்கக் கணினி, மின்னணு கடிகாரம், ப்ளுடூத் போன்றவை தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் விழா! 11 சாதனைப் பெண்களுக்கு தேவி விருதுகள்!

டிஎஸ்பி ரிச்சா கோஷ்..! உலகக் கோப்பையை வென்றதற்கு மமதா பானர்ஜியின் பரிசு!

அதிகரிக்கும் காட்சிகள்... ஆண்பாவம் பொல்லதாது வசூல் எவ்வளவு?

பிகார்: பாலம் இல்லையெனில், வாக்குகளும் இல்லை!! 77 ஆண்டுகளாக கிராமப் போராட்டம்!

ராஜஸ்தான்: பாதுகாப்புப் பயிற்சியின்போது ஏவுகணையின் ஒரு பகுதி விழுந்ததால் பரபரப்பு

SCROLL FOR NEXT