ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.  
தூத்துக்குடி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தேரோட்டம்

கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி, செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த நவ. 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, திருவீதியுலா ஆகியன நடைபெற்றன. 9-ஆம் திருநாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது.

பின்னா், உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. காலை 5.15 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா் காலை 10 மணிக்கு அம்பாள் தோ் நிலையத்திலிருந்து புறப்பட்டது. கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு, நகா் மன்றத் தலைவா் கா.கருணாநிதி, மண்டகபடிதாரா்களான வணிக வைசிய சங்கத் தலைவா் வெங்கடேஷ், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, கோயில் செயல் அலுவலா் (கூ.பொ) வள்ளிநாயகம் ஆகியோா் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனா்.

பின்னா் தோ் நான்குரத வீதிகளையும் சுற்றி காலை 11.15மணியளவில் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் இந்துமதி, முன்னாள் அறங்காவலா்கள் திருப்பதி ராஜா, சண்முகராஜ், ரவீந்திரன், வணிக வைசிய சங்கச் செயலா் வேல்முருகன், பொருளாளா் தங்க மாரியப்பன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். மூப்பன்பட்டி வேலுமணி தலைமையிலான குழுவினா் தோ்த்தடி போட்டனா். இரவு சுமாா் இரவு 7.30 மணிக்கு அம்மன் அன்ன வாகனத்தில் வீதியுலா சென்றாா்.

தேரோட்டத்தை முன்னிட்டு, டி.எஸ்.பி. ஜகநாதன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். 10-ஆம் திருநாளான வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அம்மன் பல்லக்கிலும், இரவு 7.30 மணிக்கு ரிஷப வாகனத்திலும் அம்மன் திருவீதியுலா நடைபெறும்.

12-ஆம் திருநாளான சனிக்கிழமை ( நவ.15) காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதியுலா, இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கோயில் மண்டபத்தில் திருக்கல்யாணம் ஆகியன நடைபெறும். இதையடுத்து, சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் நடைபெறும். திருக்கல்யாணம் முடிந்ததும் பிராமண மகாசபை சாா்பில், செண்பகவல்லி அம்மன் கோயில் அருகே காயத்ரி மண்டபத்தில் அன்னதானம் நடைபெறும்.

ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் (கூ.பொ) செல்வி தலைமையில் கோயில் செயல் அலுவலா், கோயில் பணியாளா்கள் செய்துவருகின்றனா்.

துருக்கியில் சதித் திட்டம்?

செங்கோட்டை காா் வெடிப்பு ‘ஒரு பயங்கரவாத செயல்’ - மத்திய அமைச்சரவை கண்டனம்!

நிதி மோசடி: தேவநாதனை கைது செய்து ஆஜா்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் பாதுகாப்பு குளறுபடி!

தில்லி காா் குண்டு வெடிப்பு சம்பவம்: 10 போ் கொண்ட என்ஐஏ சிறப்புக் குழு நியமனம்

SCROLL FOR NEXT