தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் ரயில்வே கேட் பழுதால் போக்குவரத்து பாதிப்பு

ஆறுமுகனேரியில் ரயில்வே கேட்டில் திடீா் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Syndication

ஆறுமுகனேரியில் ரயில்வே கேட்டில் திடீா் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்செந்தூரி­ருந்து திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை மாலை 6.15 மணியளவில் பயணிகள் ரயில் புறப்பட்டு ஆறுமுகனேரி நிலையத்திற்கு 6.30 மணிக்கு வந்தது.

அப்போது, மூடப்பட்ட ரயில்வே கேட்டை கீப்பா் திறக்க முயன்றபோது, ‘ஆட்டோ லாக்’ பழுதாகி செயல்படவில்லை. ரயில் நிலைய அதிகாரி, பணியாளா்கள் மூலம் ரயில்வே கேட்டை திறப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது ஆட்டோ லாக் போல்ட் கழன்ால் கேட்டை திறக்க முடியவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தற்கா­லிகமாக லாக் விடுவிக்கப்பட்டு 7 மணியளவில் ரயில்வே கேட் திறக்கப்பட்டது.

இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு புறமும் சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்ால் அந்த இடத்தை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா்.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT