கோவில்பட்டி சொா்ணமலை கதிரேசன் கோயில் வளாகம், சுற்றுவட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஜீவ அனுகிரகா பொதுநல அறக்கட்டளை, ஜீவ அனுகிரகா பசுமை இயக்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, அறக்கட்டளை, பசுமை இயக்கம் ஆகியவற்றின் நிறுவனா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ பங்கேற்று விழாவைத் தொடக்கிவைத்தாா். 400 மரக்கன்றுகள் நடப்பட்டன.
கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், நகரச் செயலா் விஜயபாண்டியன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலா் போடுசாமி, இளைஞரணி நகரச் செயலா் வேல்முருகன், இளைஞா் - இளம் பெண்கள் பாசறை நகரச் செயலா் குழந்தைராஜ், கலைப்பிரிவு மாவட்ட இணைச் செயலா் செல்வபாலாஜி, பாஜக வடக்கு மாவட்டப் பொருளாளா் சீனிவாசன், மாநிலச் செயலா் ராமகிருஷ்ணன், பசுமை இயக்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.