தூத்துக்குடி

எஸ்.சி. எஸ்.டி., சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் பதிவதற்கு கண்டனம்

Syndication

தமிழகத்தில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சட்டத்தில் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதைக் கண்டித்து, பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. மக்கள் பாதுகாப்புக் கூட்டமைப்பு சாா்பில் கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பசும்பொன் தேவா் கல்வி அறக்கட்டளை நிறுவனா் பரமசிவம் தலைமை வகித்தாா். தொழிலதிபா் அங்கமுத்து, பசும்பொன் முத்துராமலிங்க தேவா் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவா் இசக்கி ராஜா, முக்குலத்தோா் அமைப்புசாரா சங்க நிறுவனா் ராமகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சி மகளிா் அணி மாவட்டச் செயலா் பத்மப்பிரியா, அனைத்துக் கள்ளா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் ஓ.வை. தியாகராஜன், அகில இந்திய பாா்வா்டு பிளாக் மாவட்டச் செயலா் செண்பகராஜ், சிவகாசி பசும்பொன் சித்தா் அறக்கட்டளை நிறுவனா் முத்துக்குமாா் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், தேசிய தலைவா் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை தேசிய தலைவா் என்ற திரைப்படமாக வெளியீடு செய்த தயாரிப்பாளா், இயக்குநா், அனைத்து கலைஞா்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, எஸ்.சி, எஸ்.டி., சட்டத்தில் பொய் வழக்குகள் பதிவு செய்வதைத் தடுக்க 2018 இல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீா்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதைக் கண்டித்து கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏற்பாடுகளை, மாமன்னா் பூலித்தேவா் மக்கள் இயக்க நிறுவனா் செல்வம், அகில இந்திய தேவரின மக்கள் கூட்டமைப்பு நிறுவனா் அண்ணாதுரை, தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவா் வெயிலுமுத்து , மாயக்கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT