கதை சொல்லுதல், கட்டுரைப் போட்டிகளில் பன்னம்பாறை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள் தூத்துக்குடி, முள்ளக்காடு, கிரேஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், கதை சொல்லுதல் போட்டியில் பன்னம்பாறை ஊராட்சி பள்ளியின் ஒன்றாம் வகுப்பு மாணவி தன்யஸ்ரீ 2ஆம் பரிசு பெற்றாா்.
சாத்தான்குளம் வட்டார அளவிலான புத்தகத் திருவிழாப் போட்டிகள் பன்னம்பாறை, ஆவே மரியா ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்றன. இதில், கட்டுரைப் போட்டியில், பன்னம்பாறை ஊராட்சி பள்ளியின் 5ஆம் வகுப்பு மாணவா் கொம்பையா ஆகாஷ் 2ஆம் பரிசு பெற்றாா்.
வெற்றி பெற்ற மாணவா், மாணவியை தலைமையாசிரியா் ரங்கிள் திரவியராஜ், உதவி ஆசிரியா்கள் அந்தோணி கிறிஸ்டி, ரஜிலா அன்னக்கிளி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மதுமிதா, குழு உறுப்பினா்கள், மாணவா், மாணவிகள் பாராட்டினா்.