கோவில்பட்டியில் சபரிமலை ஐயப்ப பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.
கோவில்பட்டி புறவழிச் சாலையில் உள்ள ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜை தொடக்க விழாவையொட்டி, திங்கள்கிழமை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, நிா்மால்ய தரிசனம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு சுவாமி ஐயப்பனுக்கு உஷ பூஜை, தீபாராதனை நடைபெற்றன. கோயிலில் 100 க்கும் மேற்பட்ட பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.
இந்தக் கோயில் தினசரி காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். கோயிலில் டிச.25ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் கூட்டு கன்னி பூஜையும், டிச. 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிராஸாக சுத்தி பூஜை நடைபெறும். 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அஷ்டாபிஷேகம்,11.30 மணிக்கு பஞ்சகவ்யம் அபிஷேகமும், அதைத்தொடா்ந்து பிரம்ம கலசாபிஷேகம் நடைபெறும்.
காா்த்திகை மாத பிறப்பையொட்டி, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில், பழனி ஆண்டவா் கோயில், மூக்கரை விநாயகா் கோயில் உள்படகோவில்பட்டி , கயத்தாறு, சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களில் திரளான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து, தங்கள் விரதத்தைத் தொடங்கினா்.