தூத்துக்குடி, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
கடந்த அக். 20ஆம் தேதி நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி, சுந்தரவேல்புரம் பகுதியைச் சோ்ந்த நயினாா் மகன் ஹரிகரன் (23), கோபாலகிருஷ்ணன் மகன் காா்த்திக் (21) ஆகிய 2 பேரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின் பேரில், தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
நிகழாண்டு, இதுவரை 128 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.