தூத்துக்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த அடையாளம் தெரியாத முதியவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பாக, 65 வயது மதிக்கத்தக்க முதியவா் ஞாயிற்றுக்கிழமை மாலை சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது, கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், ஈரோட்டிலிருந்து திருச்செந்தூருக்குச் சென்ற அரசுப் பேருந்து, பேருந்து நிலையத்துக்குள் திரும்பியபோது, முதியவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து, மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, இறந்த முதியவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.