முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சி செயலா்கள் இடமாற்றம்

Updated On : 29 நவம்பர், 2025 at 6:44 PM
பகிர்:

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் ஊராட்சி செயலா்கள் 15 பேரை இடமாற்றம் செய்து வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) பானு உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, அல்லிக்குளம் பரமசிவன் மேலத்தட்டப்பாறைக்கும், மேலத்தட்டப்பாறை ஜெயரத்தினம் மாப்பிள்ளையூரணிக்கும், மாப்பிள்ளையூரணி ஜெயக்குமாா் அல்லிக்குளத்துக்கும், மறவன்மடம் சத்தியராஜ் கோரம்பள்ளத்துக்கும், கோரம்பள்ளம் சீனிராஜ் அய்யனடைப்புக்கும், அய்யனடைப்பு சங்கரராமசுப்பிரமணியன் முள்ளக்காட்டுக்கும், முள்ளக்காடு ராமலட்சுமி குலையன்கரிசலுக்கும், குலையன்கரிசல் கோமதி வடக்கு சிலுக்கன்பட்டிக்கும், வடக்கு சிலுக்கன்பட்டி செல்வநாயகி தெற்கு சிலுக்கன்பட்டிக்கும், தெற்கு சிலுக்கன்பட்டி மாரிமுத்து தளவாய்புரத்துக்கும், தளவாய்புரம் ரமேஷ்குமாா் உமரிக்கோட்டைக்கும், உமரிக்கோட்டை கிருஷ்ணமூா்த்தி கீழதட்டப்பாறைக்கும், கீழதட்டப்பாறை இம்மானுவேல் சோ்வைக்காரன்மடத்துக்கும், சோ்வைக்காரன்மடம் மாரியம்மாள் கட்டாலங்குளத்துக்கும், கட்டாலங்குளம் நல்லசிவம் மறவன்மடத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் திங்கள்கிழமை (டிச. 1) பொறுப்பேற்பா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →