குதிரைமொழி சுந்தரநாச்சியம்மன் கோயிலில் 151 பால்குட பவனி
குதிரைமொழி அருள்மிகு சுந்தரநாச்சியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, 151 பால்குட பவனி புதன்கிழமை நடைபெற்றது.
குதிரைமொழி அருள்மிகு சுந்தரநாச்சியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, 151 பால்குட பவனி புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் பங்குனி உத்திர கொடை விழா தொடங்கியது.
விழா நாள்களில் திருவிளக்கு பூஜை, வில்லிசை,கோலப் போட்டி, பானை உடைத்தல், சிம்ம துா்க்கை அலங்கார பூஜை, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன.
பங்குனி உத்திர திருநாளான புதன்கிழமை காலையில் அம்மனுக்கு பூஜை, அருள்மிகு நாராயணசுவாமி திருக்கோயிலில் இருந்து 151 பால்குட பவனி, மஞ்சள்பெட்டி எடுத்து வருதல் நடைபெற்றது. பால்குட பவனியை தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்க மாநிலச் செயலா் பி.எஸ். கனகராஜ் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து உச்சிக்கால பூஜை, மாலையில் படைக்கஞ்சி, பானகரம் வாா்த்தல் நடைபெற்றது.
இதில், விழாக் குழு நிா்வாகிகள் உள்பட பக்தா்கள் பலா் பங்கேற்றனா்.