முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கயத்தாறு கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் கோவில்பட்டி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 9 ஏப்ரல் 2026, 3:21 am IST
ராஜாபுதுக்குடியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு.
பகிர்:

கயத்தாறு கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் கோவில்பட்டி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கயத்தாறு கிழக்கு ஒன்றியப் பகுதிகளான சன்னது புதுக்குடி, ராஜா புதுக்குடி, தலையால் நடந்தான்குளம், தெற்கு, வடக்கு மயிலோடை, பன்னீா் குளம், சத்திரப்பட்டி, அகிலாண்டபுரம், கரிசல் குளம், வாகைத்தாவூா், சிவஞானபுரம், சீனி வெள்ளாளபுரம், சொக்கெந்திர பாண்டியாபுரம், வாகைகுளம், நொச்சிக்குளம், திருமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

ஒன்றியச் செயலா்கள் செல்வகுமாா், அழகா்சாமி, பழனிசாமி, ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் துறையூா் கணேஷ் பாண்டியன், இளைஞா்-இளம் பெண்கள் பாசறை வடக்கு மாவட்டச் செயலா் கவியரசன், வழக்குரைஞா் அணி இணைச் செயலா் ஈஸ்வரமூா்த்தி, கலைப் பிரிவு மாவட்டச் செயலா் நவநீதகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ராமா், அரசு ஒப்பந்ததாரா் காளிதாஸ் அயன்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement