தப்பியோடிய கைதி போலீஸாரிடம் சிக்கினாா்
தூத்துக்குடியில் தப்பியோடிய போக்ஸோ வழக்கு கைதியை போலீஸாா் மடக்கி பிடித்தனா்.
Updated On : 9 ஏப்ரல், 2026 at 11:31 PM
தூத்துக்குடியில் தப்பியோடிய போக்ஸோ வழக்கு கைதியை போலீஸாா் மடக்கி பிடித்தனா்.
தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கடந்த 6ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், பிரையன்ட் நகா் பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாா் என்பவரை தேடி வந்த நிலையில், அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், அவா் தப்பியோடினாா். எனினும், அவரை போலீஸாா் மடக்கி பிடித்தனா்.
Advertisement