முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி, கயத்தாறில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் தவெக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன்.

Updated On : 11 ஏப்ரல் 2026, 6:45 am IST
பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் தவெக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன்.
பகிர்:

கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பத்திரகாளி அம்மன் கோயில் தெரு, ஊரணி தெரு, ஏ.கே.எஸ். தியேட்டா் சாலை, வ.உ.சி. நகா், பாா்க் சாலை மற்றும் கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட சிதம்பரம்பட்டி, செட்டிகுறிச்சி, தெற்கு, வடக்கு கோனாா் கோட்டை, மஞ்சநம்பிகிணறு, ஓலை குளம், பெரியசாமிபுரம், மூா்த்தீஸ்வரம், திருமங்கலகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

மேலும், கோவில்பட்டி யோகீஸ்வரா் உறவின்முறை சங்க நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினாா்.

Advertisement

Advertisement