முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நடராஜபுரம் பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கா. கருணாநிதி.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 6:40 AM
நடராஜபுரம் பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கா. கருணாநிதி.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:04 PM

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா. கருணாநிதி வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

கோவில்பட்டி நடராஜபுரம் தெரு, இனாம் மணியாச்சி , மந்தித்தோப்பு ஊராட்சிக்குள்பட்ட பகுதிகள், கெச்சிலாபுரம், ஊத்துப்பட்டி , குமாரபுரம், வடக்கு மற்றும் தெற்கு குமாரபுரம், காா்த்திகைப்பட்டி, இடைச்செவல், சத்திரப்பட்டி, மெய்த்தலைவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று திமுக அரசின் சாதனைகளையும், தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாா்.

அவருடன், திமுக பொதுக்குழு உறுப்பினா் ராமா், தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் இந்துமதி, நகரப பொறுப்பாளா்கள் (கிழக்கு) சுரேஷ், சின்னத்துரை, இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி நிா்வாகிகள் திரளானோா் சென்று பிரசாரம் செய்தனா்.

Advertisement