ஏரல் சோ்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 16 ஏப்ரல், 2026 at 7:45 PM
ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. பின்னா், விமானக் கலசத்துக்கு கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டியன் நாடாா் புனித நீரால் அபிஷேகம் செய்தாா். அதையடுத்து, சோ்மன் அருணாசல சுவாமிக்கு பலவகை நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இரவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி நகா்வலம் வருதல் நடைபெற்றது.
Advertisement