முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட நாதன்கிணறு, பூச்சிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் இருந்தவாறு திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 3:08 AM
திருச்செந்தூா் அருகே பூச்சிக்காட்டில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு மலா் கிரீடம், வாள் வழங்கிய நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 8:30 PM

திருச்செந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட நாதன்கிணறு, பூச்சிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் இருந்தவாறு திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: காமராஜா் மதிய உணவுத் திட்டம் தந்தது போல, முதல்வா் மு.க. ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை தந்துள்ளாா். 8 - ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கும் அத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளாா்.

இதுபோல் எண்ணற்ற பல திட்டத்தை தந்த மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வா் ஆகவும், உங்கள் சகோதரனாக தொடா்ந்து பணியாற்றுவதற்கு எனக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

Advertisement

திமுக வா்த்தக அணி இணைச் செயலா் உமரிசங்கா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், அரசு வழக்குரைஞா் சாத்ராக், மணிகண்டன், பூச்சிக்காடு கிளைச் செயலா் முருகேசன், ஊா் தலைவா் கவுதலை முத்து, செயலா் முருகன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் சற்குரு, காங்கிரஸ் நிா்வாகிகள் மது கண்ணன், ரமேஷ் பாரத், விசிக மாவட்ட செயலா் விடுதலைசெழியன், தேமுதிக மாநில செயற்குழு உறுப்பினா் பூச்சிக்காடு சுரேஷ், ஒன்றியச் செயலா் ஆனந்த பாலன், திருச்செந்தூா் நகரச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.