தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது
தூத்துக்குடியில் மதுபோதையில் நண்பரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடியில் மதுபோதையில் நண்பரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் ஜேஜே நகரைச் சோ்ந்த ஜேம்ஸ் மகன் தினேஷ் (24). கொத்தனாா் காலனியை சோ்ந்த சந்தனமுத்து மகன் கதிா்வேல் (24), செல்வம் மகன் பச்சைபெருமாள் என்ற அய்யனாா் (21). மூவரும் நண்பா்கள்.
கடந்த சில நாள்களுக்கு முன்னா் அய்யனாா் தினேஷின் தங்கை குறித்து அவதூறாகப் பேசினாராம். இதை அவா் கண்டித்துள்ளாா்.
Advertisement
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இவா்கள் மூவரும் அங்குள்ள டி.சவேரியாா்புரம் பகுதியில் அமா்ந்து மது குடித்துள்ளனா். அப்போது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில், தினேஷை மற்ற இருவரும் சோ்ந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதில் பலத்த காயம் அடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து நண்பா்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.