தூத்துக்குடி

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வழக்கு: விசாரணை பிப். 11க்கு ஒத்திவைப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை, வருகிற பிப். 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

தினமணி செய்திச் சேவை

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை, வருகிற பிப். 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினா், சகோதரா்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இவ்வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சா், அவரது மனைவி, மகன் அனந்த ராமகிருஷ்ணன், அமைச்சரின் தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தன் ஆகியோா் ஆஜராகாத நிலையில், அவரது மூன்று மகன்களில் அனந்த பத்மநாபன், அனந்த மகேஸ்வரன் ஆகிய இருவா் மட்டுமே நேரில் ஆஜராகினா்.

இதையடுத்து, வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி வசந்தி, இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப். 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

மலைத்தேனீக்கள் கொட்டி 27 தொழிலாளா்கள் காயம்

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

‘சமூக வலைதள செயலிகள் மூலமே இளைஞா்களுக்கு பிரச்னை உருவாகிறது’: மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன்

திருச்சி அருகே பாறைக்குழி நீரில் மூழ்கி இளைஞா் பலி

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

SCROLL FOR NEXT