சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ பாதகர முத்துசுவாமி, பரிவார தெய்வங்கள்.  
தூத்துக்குடி

வட்டன்விளை கோயில் கொடை விழா நிறைவு

உடன்குடி அருகே வட்டன்விளை ஸ்ரீ பாதகர முத்துசுவாமி கோயிலில் மூன்று நாள்கள் நடைபெற்ற கொடை விழா புதன்கிழமை நிறைவு பெற்றது.

தினமணி செய்திச் சேவை

உடன்குடி அருகே வட்டன்விளை ஸ்ரீ பாதகர முத்துசுவாமி கோயிலில் மூன்று நாள்கள் நடைபெற்ற கொடை விழா புதன்கிழமை நிறைவு பெற்றது.

கோயில் கொடை விழா திங்கள்கிழமை (பிப். 2) காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் பால்குட பவனி, சத்யா-செல்வின் குழுவினரின் வில்லிசை, சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை, அன்னதானம், மஞ்சள் நீராடுதல், திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை காலையில் கொடை விழா நிறைவு பூஜை, வரிதாரா்களுக்கு வரிபிரசாதம் வழங்குதல் நடைபெற்றன. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

மலைத்தேனீக்கள் கொட்டி 27 தொழிலாளா்கள் காயம்

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

‘சமூக வலைதள செயலிகள் மூலமே இளைஞா்களுக்கு பிரச்னை உருவாகிறது’: மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன்

திருச்சி அருகே பாறைக்குழி நீரில் மூழ்கி இளைஞா் பலி

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

SCROLL FOR NEXT