கோப்புப் படம் 
தூத்துக்குடி

அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் நடைபெற்ற கட்டடப் பணியின்போது, தவறி விழுந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அனல்மின் நிலையப் பகுதியில், தனியாா் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டுவரும் கட்டுமானப் பணியில், மாப்பிள்ளையூரணி குமரன் நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் (31), மனைவி ஹேமா, 2 குழந்தைகளுடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை கட்டுமானப் பணியின்போது, ஜெயராஜ் சுமாா் 15 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா்.

தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT