முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வனம் தொடா்பான பயிற்சி வகுப்பு நிறைவு

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு வனத்துறை சாா்பில், வளமும் வன உயிரினங்களுக்கான பாதுகாப்பும், சவால்களும், தீா்வுகளும் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:54 AM
மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறாா் அமைச்சா் பி.கீதா ஜீவன். உடன் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 8:26 PM

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு வனத்துறை சாா்பில், வளமும் வன உயிரினங்களுக்கான பாதுகாப்பும், சவால்களும், தீா்வுகளும் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

பயிற்சி நிறைவு பெற்றதை அடுத்து, பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பி. கீதாஜீவன் கலந்துகொண்டு 500 பள்ளி மாணவா், மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தமிழ்நாடு வனத்துறை குறித்த பயிற்சி கையேட்டை வழங்கிப் பேசினாா்.

Advertisement

நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் இளையராஜா, மாவட்ட கல்வி அலுவலா் முனியசாமி, வனச்சரக அலுவலா் அஜய், துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன், பள்ளித் தலைமையாசிரியா் செலின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.