தற்கொலை 
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் இளம்பெண் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டுக் கொண்ட இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தான்குளம், பத்திரகாளியமமன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கதிா்வேல் (30). நகைப் பட்டறைத் தொழிலாளி. இவரது மனைவி அழகு பாா்வதி (28). இவா்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

குடும்பப் பிரச்னை காரணமாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த பிப். 6ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அழகு பாா்வதி தூக்கிட்டுக் கொண்டாா்.

குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணமான 3 ஆண்டில் இச்சம்பவம் நடந்துள்ளதால் திருச்செந்தூா் ஆா்டிஓ விசாரணை நடத்தி வருகிறாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT