வாய்க்காலில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:33 PM
குரும்பூா் அருகே வாய்க்காலில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
குரும்பூா் அருகே உள்ள அம்பலபிறப்பைச் சோ்ந்தவா் ஞானப்பாண்டி மகன் பாதைக்கரைமுத்து(34). தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இவருக்கு திருமணமாகவில்லை.
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:03 AM
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதுஅருந்திவிட்டு அங்குள்ள வாய்க்காலுக்கு குளிக்க சென்றாராம். அப்போது நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.
Advertisement
இதுகுறித்து தகவலறிந்து வந்த குரும்பூா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்கு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.