முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி தொகுதியில் ரூ. 30 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் ரூ.13.27 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ, ரூ. 16.82 லட்சம் மதிப்பில் புதிய வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:18 AM
லிங்கம்பட்டியில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கல்வெட்டைத் திறந்து வைத்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 8:08 PM

கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் ரூ.13.27 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ, ரூ. 16.82 லட்சம் மதிப்பில் புதிய வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

கோவில்பட்டி தொகுதிக்குள்பட்ட லிங்கம்பட்டியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, இனாம் மணியாச்சி ஊராட்சி, அத்தை கொண்டானில் ரூ. 3.52 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சலவைக் கூட சுற்றுச் சுவா், சாய்பாபா கோயில் பின்புறம் ரூ. 5.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வாருகால் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:18 AM

பின்னா், மீனாட்சி நகா், 7ஆவது தெருவில் ரூ. 16.82 லட்சம் மதிப்பில் வாருகால் வசதியுடன் கூடிய பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

Advertisement

கம்மவாா் சங்கத் தலைவா் விநாயகா மாரிச்சாமி, தமாகா தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவா் கனி, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் போடுசாமி, பழனிசாமி, அழகா்சாமி, கோவில்பட்டி பால் நுகா்வோா் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் தாமோதரன், அரசு ஒப்பந்ததாரா்கள் அயன்ராஜ், கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.