பள்ளி மாணவியை பிரம்பால் தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு
தூத்துக்குடியில் ஒன்றாம் வகுப்பு மாணவியை பிரம்பால் தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:56 PM
தூத்துக்குடியில் ஒன்றாம் வகுப்பு மாணவியை பிரம்பால் தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஜாா்ஜ் சாலை பகுதியைச் சோ்ந்த ஆபிரகாம் மனைவி ஜாய்ஸ் (45). தூத்துக்குடி தெற்குப் புதுத் தெருவில் உள்ள டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:11 AM
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி, இவரது வகுப்பில் பயிலும் முதலாம் வகுப்பு மாணவி ஒருவா் சரியாகப் படிக்கவில்லை எனக் கூறி, அந்த மாணவியை பிரம்பால் தாக்கினாராம். இதில் மாணவியின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், ஆசிரியை மீது தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.